திருவாளர். அம்சம் ஏழுமலை அவர்கள் வணிகம், ஆன்மிகம், கலை ஆகியவற்றில் நாட்டமுள்ள பன்முக பண்பாளர், சென்னைக்கு அடுத்து உள்ள செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள நெம்மேலி எனும் குக்கிராமத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்து, கூலிவேலை செய்து, தமது அதீத முயற்சினால் கல்வி பயின்று, ஒரு வெற்றிகரமான கட்டுமான பொறியாளராக மாறின வரலாற்றுக்கு சொந்தக்காரர்.